வால்பாறை கல்லார்குடி பழங்குடியினருக்கு மாற்றுக்குடியிருப்பை உடனடியாக வழங்க வேண்டும்- பொள்ளாச்சி எம்.பி கு.சண்முகசுந்தரம் கோரிக்கை

வால்பாறை கல்லார்குடி பழங்குடியினப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடியாக மாற்று குடியிருப்பை வழங்க வேண்டும் என பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் வன அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள தாய்முடி எஸ்டேட் அடர்ந்த வனப் பகுதி நிறைந்த பகுதியாகும்.இங்குள்ள கல்லார்குடி பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இம்மக்கள் குடியிருப்புகளை இழந்தனர்.

இதனையடுத்து இப்பகுதிமக்கள், தெப்பக்குள மேடு என்ற இடத்தில் தற்காலிகக் குடிசை அமைத்து வசித்து வந்தனர். ஆனால் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி வசிப்பதாகக்கூறி வனத்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் தாய்முடி தேயிலைத் தோட்டத்தில், இருபத்தி மூன்று குடும்பங்களுக்கு எட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டு வசித்து வருகின்றனர்.

இருந்தப்போதும் கல்லார் பழங்குடியின மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தங்களுக்குத் தங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையில் அடர்ந்த வனப் பகுதியான தெப்பக்குளம் மேடு பகுதியில் குடியிருப்புகளை அமைக்க அனுமதி வழங்குமாறு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அறவழிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சிகள் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.



இந்நிலையில் இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட வன அலுவலர் கணேசனை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தார். அதில் கல்லார் பழங்குடியின மக்களுக்கான மாற்று குடியிருப்பை விரைவாக வழங்கவும், நெடுங்குன்று செட்டில்மன்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சாலை வசதி அமைக்க அனுமதி தர வேண்டும் எனவும் இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வால்பாறை நகர கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் த.பால்பாண்டி B.A.,B.L., மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் வால்பாறை பொது மக்களுடன் இணைந்து வன அதிகாரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் கோவை தெற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் Er.பிரபாகரன் மற்றும் Er.ராம் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...