கோவையில் முக்கியச்சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளால் தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதால், இதுக்குறித்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை: கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. இதனால்குப்பைத்தொட்டி முழுவதுமாக நிறைந்து விடுவதால், இதில் உள்ளக் கழிவுகளை உண்பதற்காக கூட்டம், கூட்டமாக ஆடுகள் மற்றும் மாடுகள் அப்பகுதிக்கு வருகின்றன. மேலும் அதேப்பகுதியில் சுற்றித்திரிவதன் காரணமாக அவ்வழியாக வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அப்பகுதியைக் கடக்க முடியாத நிலை உள்ளது.
மேலும் இதனால் சில நேரங்களில் விபத்துக்களும் அதிகரிக்கிறது. இதுக்குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டினை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர். எனவே இனிவரும் காலங்களில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடை உரிமையாளர்களைக் கண்டறிந்து அபராதம் விதிப்பதுடன், அவற்றை வளர்ப்பு கொட்டகையில் கட்டி வைத்து வளர்க்க அறிவுறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.