திருப்பூரில் அரசு மதுபானக்கடை அருகே சாக்கடையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்பு - போலீசார் விசாரணை..!

அரசு மதுபானக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மதுபானக் கடைக்கு அருகாமையில் சாக்கடையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் கொங்கனகிரி மூன்றாவது வீதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர் சாக்கடையில் பிணமாக கிடந்துள்ளார்.



இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறந்து கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொது மக்கள் குடியிருப்பு மிகுந்த பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் தினந்தோறும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வீட்டிற்கு வாசலிலேயே குடிபோதை நபர்கள் படுத்து உறங்கி விடுவதாகவும் இது போல ஒரு சிலர் இறந்து விடுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருவதால் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...