முதியவர்களின் குறைகளைத்தீர்க்க 14567 என்ற இலவச உதவி எண்ணைப்பயன்படுத்திக்கொள்ளலாம் – கோவை ஆட்சியர் சமீரன்!

முதியவர்களுக்கு எழும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் குறைகளைத்தீர்க்கும் விதமாக 14567 என்ற இலவச உதவி எண் நடைமுறையில் உள்ளதால் இதனை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் இன்று ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட கோவை ஆட்சியர் சமீரன், மூத்த குடிமக்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், முதுமை என்பது அனுபவத்தின் பொக்கிஷம் எனவும் இந்நேரத்தில் அனைத்து வகையிலும் சமூகத்திற்கும், தேச நலனிற்கும் சேவையாற்றிய மூத்த குடிமக்களுக்கு தனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்தார். இதோடு மனிதனாப்பிறந்து குழந்தைப்பருவம், இளமைப்பருவம் மற்றும் வயதாகும் போது தான் ஒரு மனிதன் முழுமையடைகிறார் என கூறினார்.



மேலும் முதியவர்களின் அனுபவம், அறிவு, சாதனைகள் ஆகியவற்றை நினைவுக் கூர்ந்து இளைய தலைமுறையினர் ஊக்கம் அடையவதாகவும், உழைப்பாலும், உள்ளத்தாலும், வழிகாட்டுதல்களாலும் நல்ல சமுதாயத்தை உருவாக்கிய மூத்தக் குடிமக்களை நினைத்துப் பெருமிதம் அடைவதாகவும் ஆட்சியர் கூறினார். இதோடு அறிவியல் முன்னேற்றம் காரணமாக இறப்பு விகிதம் குறைந்து, மனிதனின் வாழ்நாள் அதிகரித்து உள்ளதாக கூறிய அவர், இதன் காரணமாக மூதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்தார். குறிப்பாக தமிழக மக்கள் தொகையில் 8.82 சதவீதம் முதியோர்கள் இருப்பதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்.



இதோடு முதுமையில் ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் தீடிரென நோய் ஏற்பட்டால் எப்படி தீர்வு காணவேண்டும் என்பது குறித்து இளைய தலைமுறைகள், முதியவர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்ளவது அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு மூத்த குடிமக்களுக்காகப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற சூழலில், தங்களது ஏற்படும் பிரச்சனைகள் குறித்து முதியவர்கள் எப்போது வேண்டுமானாலும் குறைகளைத்தெரிவிக்க 14567 என்ற இலவச உதவி எண் நடைமுறையில் உள்ளது. எனவே தயக்கம் இன்றி எப்போது வேண்டுமானாலும் புகார்களைத் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சமீரன் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது சமூக நல அலுவலர் தங்கமணி, வருவாய் கோட்டாச்சியர் ரவி சந்திரன், இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...