கிணத்துக்கடவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு சிறப்பு முகாம்.!!

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான அலின்கோ நிறுவனம் சார்பில் இன்று கிணத்துக்கடவில் அரசு துவக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணங்கள் பயணிகள் தேர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான அலின்கோ நிறுவனம் சார்பில் இன்று கிணத்துக்கடவில் அரசு துவக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணங்கள் பயணிகள் தேர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.



கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் தலைமையில் நடைபெற்ற முகமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மற்றும் திமுக மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.



இந்த முகாமில் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான உபகரணங்களுக்கான பெறுவதற்கான மனுவை அளித்தனர்.

இந்த முகாமில் செவித்திறன், கண், கை, கால், மூளை வளர்ச்சி சம்பந்தமான சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டிக்கான சிகிச்சை செய்தனர்.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்களைத் தேர்வு செய்து மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முகாமை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக முகாமை கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் கிணத்துக்கடவு பேரூராட்சி முன்னாள் தலைவர் கதிர்வேல், திமுக தலைமை கழக பேச்சாளர் தமிழ்பித்தன், கிணத்துக்கடவு நகர செயலாளர் கனகராஜ், திமுக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சக்தி சரண்யா உள்ளிட்டோர் இந்த முகாமை துவக்கி வைக்கும் போது உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...