கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு 25-வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புகார் கொடுக்க வந்த போது திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு 25-வயது மதிக்கத்தக்க ஒரு பெண் புகார் கொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.
இதை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றினார். தொடர்ந்து அவரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் தர்மபுரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா (27), என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர் போலீசாரிடம் கூறும்போது எனது சொந்த ஊர் தருமபுரி எனக்கு ஜெகதீஸ்வர் என்பவருடன் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக நான் என் கணவரைப் பிரிந்து கோவையில் தங்கி கூலி வேலைக்குச் சென்று வருகிறேன்.
எனது மகன் கணவருடன் உள்ளார். எனது மகனை என்னுடன் அனுப்ப மறுத்து வருகின்றனர். எனவே, மகனை என்னுடன் சேர்த்து வாழ வைக்க வேண்டும். இது தொடர்பாகக் கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தேன். அப்போது கையில் மண்னைண்னையும் எடுத்து வந்து உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றேன்.
ஆனால் அதனை தடுத்து நிறுத்தி போலீசார் என்னை காப்பாற்றி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் ஐஸ்வர்யா மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.