பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனு விடுத்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள பூங்காக்களை சுத்தம் செய்திட கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் உள்ள பூங்காக்களை சுத்தம் செய்திடக் கோரி, பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு அனைத்து வட்டங்களிலும் ஒரு வட்டத்திற்கு 2 அல்லது 3 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் அனைத்தும் கடந்த ஓராண்டாக நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் படாமல் இருந்தது.

தற்பொழுது, ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் இந்த பூங்காக்கள் அனைத்தும் புதர் மண்டி, செடி, கொடிகள் வளர்ந்து புழு மற்றும் பூச்சிகள் அதிக அளவில் நிறைந்தும் மக்கள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது.
அதுபோலவே, இந்த பூங்காக்களை பராமரிப்பதற்குத் தனி காவலாளிகளும் இருந்தார்கள். அவர்களுக்கு மாதாமாதம் சரியான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது யார் பராமரிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இதனால், நடை பயிற்சிக்குச் செல்ல முடியாமலும், உடற்பயிற்சிக்குச் செல்ல முடியாமலும் குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படாமல் உள்ள சூழ்நிலை நிலவுகிறது.
எனவே, மாநகராட்சி ஆணையர் உடனடியாக தலையிட்டு பூங்காக்களை சுத்தம் செய்தும், அதற்குரிய பாதுகாவலர்களை கொண்டு பராமரிக்கவும், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.