கோவை மத்திய சிறையில் கஞ்சா, சொல்போன் பயன்பாடு அதிகரிப்பு; ஒரு நாள் முழுவதும் சோதனையில் ஈடுபட்ட போலீசார்!

கோவை மத்திய சிறை கைதிகளுக்கிடையே கஞ்சா போன்ற போதைப்பொருள்களுக்கும், செல்போன் பயன்பாடும் அதிகரித்துவருவதாக எழும் குற்றச்சாட்டையடுத்து ரோஸ்கோர்ஸ் காவல்நிலைய போலீசார் இன்று ஒரு நாள் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சிறைகளில் கோவை மத்திய சிறையும் ஒன்று. கொள்ளை, கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு வழக்குகளில் கைதான சுமார் 1500க்கு மேற்பட்ட கைதிகள் இச்சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் கோவை சிறையில் சமீப காலங்களாக கைதிகளுக்கிடையே கஞ்சா போன்ற போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரிப்பதாகவும், அதே வேளையில் செல்போன் பயன்பாடும் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துவருகிறது. இதனையடுத்து தான் ஒவ்வொரு மாதமும் கோவை மத்திய சிறை வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தான் இன்று தீடிரென உதவி ஆணையர் சதீஷ்குமார தலைமையில் சுமார 30 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற சோதனையில் கைதிகளின் உடைமைகள் மற்றும் அவர்களது அறைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த சோதனையின் முடிவில் தடை செய்யப்பட்ட எந்தப்பொருள்களும் கிடைக்கவில்லை.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...