தற்காலிக பட்டாசுக்கடைகளை திருமண மண்டபங்களில் அமைக்கமாட்டோம்; தீயணைப்புத்துறை அதிகாரிகளிடம் உறுதிமொழி பத்திரம் அளித்த கோவை வியாபாரிகள்!

தீபாவளி திருநாளன்று திருமண மண்டபங்களில் இந்தாண்டு பட்டாசுக்கடைகளை அமைக்க மாட்டோம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவையைச்சேர்ந்த வியாபாரிகள் உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்தனர்.


கோவை: கோவை மாநகரில் கடந்த சில ஆண்டுகளாக சட்டவிரோதமாக திருமண மண்டபங்களில் பட்டாசுக்கடைகள் அமைக்கும் விவகாரம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக விபத்துகளும் நிகழ்கிறது. எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் 2008 ன் படி திருமண மண்டபங்கள் மற்றம் சமுதாய கூடங்களுக்கு அருகில் பட்டாசுகள் அமைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளில் இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநகர பகுதிகளில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் தலையீடுகள் காரணமாக பின்பற்றப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

இந்நிலையில் தான் இந்தாண்டு நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவை மாநகரில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்காக வியாபாரிகளிடம் இருந்து ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் கோவை மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் யாரும் பட்டாசுக் கடைகள் அமைக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ள நிலையில், கோவை மாநகரில் திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்களை மாநகர காவல் துறைப் பெற்றுள்ளது.

இந்த சூழலில் தான், திருமண மண்டபங்களில் சட்ட விரோத பட்டாசுக் கடைகள் அமைக்கப்படும் விவகாரம் இந்த ஆண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பித்தவர்களிடம் தீயணைப்புத் துறை சார்பில் ஒரு உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது. அதில், திருமண மண்டபம், சமுதாயக்கூடம், பேருந்து நிறுத்தம், பொதுமக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தின் அருகிலோ, தற்காலிக இடத்திலோ தற்காலிக பட்டாசுக் கடை அமைக்கமாட்டேன் எனவும் அத்துடன் பட்டாசு 25 கிலோ, மத்தாப்பு 100 கிலோ மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்வேன் என எழுதிவாங்கப்பட்டது. இந்த நிபந்தனைகளை பின்பற்றாவிட்டால் எனது தற்காலிக உரிமம் ரத்தாகிவிடும் என்பதைத் தெரிந்து கொண்டேன் என்று உறுதியளிப்பதாக 20 ரூபாய் பத்திரத்தில் எழுதிக் கொடுக்கும்படி கேட்டு வாங்கி வருகின்றனர்.

மேலும் இதுக்குறித்து தீயணைப்புத்துறையினர் தெரிவிக்கையில், திருமண மண்டபங்களில் பட்டாசுக் கடைகள் நடத்துவதற்கு அனுமதிப்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறினார்கள்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...