வெண்பட்டு கூடுக்கு பணம் கேட்டு இடைத்தரகர் வீட்டின் முன்பு பாயை விரித்து விவசாயிகள் போராட்டம்.!!

போத்தனூரில் உள்ள இடைத்தரகர் வீட்டிற்குச் சென்ற விவசாயிகள் வீட்டின் முன்பு நிலுவைத் தொகை ரூபாய் 84-ஆயிரத்தை உடனடியாக அளிக்க வேண்டும் எனக் கோரி பாய் விரித்து அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வெண்பட்டு கூடு விற்று பணம் கேட்டு இடைத்தரகர் வீட்டு முன்பு விவசாயிகள் பாய்விரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சின்னவீரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் காளியப்பன் (45), செண்ணியப்பன் (42), காளிமுத்து (52), விவசாயிகளான இவர்கள் தங்கள் நிலத்தில் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் மூன்று விவசாயிகளும் தன் நிலத்தில் விளைந்த வெண்பட்டு கூடுகளைக் கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஆலை இடைத்தரகர் இடம் கொடுத்தனர்.

இதற்கு ரூபாய் 84 ஆயிரத்தை தருவதாகக் கூறியுள்ளார். ஆனால் ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் பணம் கொடுக்கவில்லை.

இது தொடர்பாக விவசாயிகள் தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சங்கத்தினர் இடமும் புகார் அளித்தனர். இந்த நிலையில் இன்று காலை மூன்று விவசாயிகளும் உடுமலைப்பேட்டையிலிருந்து கோவை வந்தனர்.

நேராக போத்தனூரில் உள்ள இடைத்தரகர் வீட்டிற்குச் சென்ற அவர்கள் வீட்டின் முன்பு பட்டு கூடிற்களுக்கான நிலுவைத் தொகை ரூபாய் 84 ஆயிரத்து உடனடியாக அளிக்க வேண்டும் எனக் கோரி பாய் விரித்து அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தைப் பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...