கோவையில் கடந்த பல மாதங்களாக போலீசாருக்கு தண்ணிகாட்டிய விசித்திர நிர்வாண கொள்ளையன் கைது..!

கோவையில் ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கில், வேலையில்லாமல் இருந்ததால் கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.



கோவை: கோவையில் கடந்த பல மாதங்களாக போலீசாருக்கு தண்ணிகாட்டிய விசித்திர நிர்வாண கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்துப் பிடித்தனர்.

விசாரணையில், இவர் இருசக்கர வாகன ஷோரூம் மற்றும் நான்கு சக்கர வாகன ஷோரூம்களை மட்டும் குறிவைத்து கொள்ளையடித்து வந்ததாக தெரிகிறது.

ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்குத் தாவுவதும், நிர்வாண கோலத்தில் ஷோரூம்மில் திரிந்து கொள்ளையடித்துச் செல்வது போன்ற சினிமாவை மிஞ்சும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன.

கோவை இராமநாதபுரம், பொள்ளாச்சி, சென்னை, ஈரோடு, மதுரை உட்பட பல்வேறு இடங்களில் நிர்வாண கோலத்தில் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், நிர்வாண கொள்ளையில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் பழய வழுக்கு தெருவை சேர்ந்த கோச்சடை என்ற பாண்டியன் என்பது தெரியவந்தது.

இவன் கோவையில் ஒரு ஹோட்டலில் பணியாற்றிவந்த நிலையில் கொரோனா ஊரடங்கில், வேலையில்லாமல் இருந்ததால் இந்த கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...