அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய புதிய தளம் துவக்கம்; ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் அவசியம் தேவை- தொழிலாளர் நலத்துறை தகவல்

அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு வசதியாக புதிய தளம் துவங்கப்பட்டுள்ளதாக கோவை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தேசிய அளவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவை பதிவு செய்யவதற்கான புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுக்குறித்த அறிவிப்பை ஒன்றை செய்திக்குறிப்பின் வாயிலாக கோவை தொழிலாளர் நல உதவி ஆணையர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அதில் இனிவரும் காலங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது தொழிலாளர்கள் இலவசமாக பதிவு செய்வதற்ககு வசதியாக eSHRAM என்ற தளம் மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இவ்வாாறு தொழிலாளர்கள் பதிவு செய்வதன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களை எளிதில் கண்டறிந்து அவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க பயனுள்ளதாக இருக்கும் என்பதால் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இதனை செயல்படுத்துகிறது.

எனவே இதுவரை பதிவு செய்துக்கொள்ளாத தொழிலாளர்கள் இனி வரும் காலங்களில், பொது சேவை மையங்கள், இ-சேவை மையங்கள் மூலம் 16 முதல் 59 வயதுக்கு உட்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சிப் பணி, மாநகர வளர்ச்சி பணி, சாலையோர வியாபாரிகள், ரிக்சா ஓட்டுநர்கள், வீட்டு பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட சமூக ஆர்வலர்கள் மீனவர்கள், செங்கள் சூளை தொழிலாளர்கள், சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள் ஆகியோர் பதிவு செய்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களாக பதிவு செய்வதற்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் அவசியம் இருக்க வேண்டும். மேலும் இ.எஸ்.ஐ., பி.எப்., வருமானவரி பிடித்தம் செய்தவர்களாக இருக்க கூடாது எனவும் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இத்திட்டத்தில் இணைக்கப்படும் என தெரிவித்தார். இதனைச் செயல்படுத்த மாவட்ட கலெக்டர் தலைமையிலான செயல்படுத்துதல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் தகுதியுடையவர்கள் இதனைப் பயன்படுத்தி பதிவு செய்து யுஏஎன் எண்ணுடன் கூடிய பதிவு அட்டை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கோவை தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...