கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பனியன் தொழிலாளி போக்சோவில் கைது..!

தாராபுரம் பகுதியில் பதுங்கியிருந்த பனியன் தொழிலாளி நாகராஜை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பனியன் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வரும் நாகராஜ் (27) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் முகநூலில் அடிக்கடி தொடர்பு கொண்டு பழகி வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்து பேசியதாகவும் தெரிகிறது. நாளடைவில் நாகராஜ் அந்த கல்லூரி மாணவியிடம் தான் காதலிப்பதாக கூறினார். இதனை நம்பி கல்லூரி மாணவியும் அவரை காதலித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராஜ் அந்த மாணவியிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம். நமது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் தன்னுடன் வருமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை உன்மை என நம்பிய மாணவியும் திருமணத்துக்கு சம்மதித்தார். சம்பவத்தன்று நாகராஜ் தான் கோவை வருவதாகவும் தயாராக இருக்கும்படியும் மாணவியிடம் கூறி உள்ளார். அதன்படி மாணவி தயாரானார்.

கோவை வந்த நாகராஜ் கல்லூரி மாணவியை திருப்பூருக்கு கடத்தி சென்றார். பின்னர், தான் தங்கி இருந்த வீட்டில் வைத்து மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். தொடர்ந்து இருவரும் கணவன்-மனைவி போல வாழ தொடங்கினர்.

நாளடைவில் நாகராஜ் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்ய தொடங்கினார். இதனால் பயந்து போன மாணவி நாகராஜிடம் இருந்து தப்பித்து வீடு திரும்பினார். பின்னர் பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை கடத்தி சென்ற நாகராஜின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் பதுங்கியிருந்த பனியன் தொழிலாளி நாகராஜை போலீசார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...