திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் பயணம்..!

"சுற்றுலாவும் உள்ளடக்கிய வளர்ச்சியும்" என்னும் கருப்பொருளை மையமாக வைத்து சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர்


திருப்பூர்: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நமது திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாபெரும் சைக்கிள் பயணம் நடைபெற்றது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப்படி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி T.அரவிந்தகுமார் அவர்களின் தலைமையில் உடுமலை தேஜஸ் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் உடுமலை சைக்கிள் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் SM நாகராஜ் அவர்களின் வழிநடத்தலில் "சுற்றுலாவும் உள்ளடக்கிய வளர்ச்சியும்" என்னும் கருப்பொருளை மையமாக வைத்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த பயணமானது அதிகாலை நான்கு மணியளவில் உடுமலை தேஜஸ் மஹாலில் இருந்து புறப்பட்டு கெடிமேடு, ஊஞ்சவேலாம்பட்டி, பொள்ளாச்சி, நா.மூ.சுங்கம், அங்கலகுறிச்சி, ஆழியாறு அணை அடைந்து, பின்னர் தேவனூர்புதூர், எரிசின்னம்பட்டி வழியாக திருமூர்த்தி அணையை அடைந்து பின்பு கடைசியாக தளி, குறிஞ்சிக்கோட்டை வழியாக அமராவதி அணை அடைந்து, பின்னர் உடுமலை தேஜஸ் மஹாலில் சிறப்பாக நிறைவு செய்தனர் (பயண தூரம் சுமார் 150கிமீ தொலைவாகும்).

இந்த மாபெரும் சைக்கிள் பேரணியில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகாக SM டிராவல்ஸ் சார்பாக சிறப்பு வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் குடிநீர் வசதியும், சைக்கிள் மெக்கானிக் ஒருவரும், அதற்குரிய கருவிகளும், முதலுதவிப் பெட்டிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



மேலும், இந்த மாபெரும் சைக்கிள் பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா சுற்றுலா துறை சார்பில் உடுமலை தேஜஸ் மஹாலில் ஏற்பாடு செய்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி அரவிந்த குமார் மற்றும் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



இந்த விழாவில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி அரவிந்தகுமார் அவர்கள் சிறப்புரை ஆற்றும் பொழுது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை பற்றியும் அதன் சிறப்புகளை பற்றியும் கூறினார். மேலும் தினமும் சைக்கிள் பயணம் மேற்கொள்வதினால் ஏற்பாடு நன்மைகளையும் பற்றியும் மேலும் திருப்பூர் மாவட்டத்திலும், உடுமலையிலும் அடுத்துவரும் சுற்றுலா சார்ந்த நலத்திட்டங்கள் குறித்து கூறினார்.

இந்த விழாவில் சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலா துறை மற்றும் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சத்யம்பாபு, ஜவஹர், சண்முகம், பிரசாந்த், பொன்ராஜ், விஜயராஜேஸ், டால்மியா மற்றும் விக்னேஷ் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...