எஸ்.பி.வேலுமணி ஆட்சியில் நடந்த முறைகேடு: கோவை மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - சி.பி.எம் முன்னாள் மண்டல தலைவர் சி. பத்மனாபன்.

கோவை மாநகராட்சி எஸ்.பி.வேலுமணியின் நேரடி மேற்பார்வையில் தான் செயல்பட்டு வந்தது. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்ற, நடைபெறாத பணிகள், நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


கோவை: சி.பி.எம் கட்சியின் முன்னாள் மண்டல தலைவர் சி. பத்மனாபன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையைவெளியிட வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து சி.பி.எம் கட்சியின் முன்னாள் மண்டல தலைவர் சி. பத்மனாபன் தெரிவிக்கையில், 

கோவையைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி தமிழ்நாட்டின் உள்ளாட்சித்துறை அமைச்சராக 2011 முதல் 2021 வரை இருந்த போது, இவரது நேரடி மேற்பார்வையில் தான் கோவை மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அப்படி செயல்பட்டு வந்த போது தான், பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் நடைபெற்றது. 

அதனால், கடந்த 10 ஆண்டுகளாக,கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்ற, நடைபெறாத பணிகள் குறித்தும் நிதி நிலைமை குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்..மேலும், JNNURM திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் திடக்கழிவு மேலாண்மை முழுமையடையாததை குறித்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் குறித்தும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் மற்றும் வட்டி விகிதம் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.வேலுமணியின் ஆட்சிகாலத்தில், மாநகராட்சியின் வளர்ச்சி பணிகள் அனைத்தும் தொண்டாமுத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தான் பெரிதும் நடந்துள்ளது.மேலும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, திடக்கழிவு மேலாண்மை பணி, 100 கோடி வளர்ச்சி பணிகளுக்கான டெண்டர்கள் ரத்து, மாநகராட்சியில் 10 சாலைகள் நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் குறித்து விவரம் அளிக்க வேண்டும். 

ஆகவே, கடந்த 10 ஆண்டுகாலமாக எஸ்.பி.வேலுமணி ஆட்சியில் நடந்த அனைத்து சீர்கேடுகளுக்கும் விளக்கம் தெரிவிக்கும் வண்ணம் கோவை மாநகராட்சி வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...