கோவையில் நின்றுகொண்டிருந்த டிராக்டர் மீது ஏறி விளையாடிய குழந்தை தவறி விழுந்து பலி.!!

கோவை அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஏறி விளையாடிய குழந்தை தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஏறி விளையாடிய குழந்தை தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த சுல்தான் பேட்டை செஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 28, டிரைவர். இவர் ஒன்றரை வயது மகள் சுருதி ஸ்ரீமான் நேற்று சதீஷ்குமாரின் சகோதரர் வீட்டு முன்பு ட்ராக்ட்ரரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

அப்பொழுது அங்கு வந்த சுருதி மற்றும் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது டிராக்டர் மீது மூன்று குழந்தைகளும் ஏறி விளையாடின எதிர்பாராதவிதமாகச் சுருதி டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

அந்த குழந்தைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினார்கள். இதைக் கேட்டு குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இது குறித்து சுல்தான் பேட்டை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை வயது சிறுமி தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...