தென்னிந்திய மில்கள் சங்கத்தின்(SIMA) புதிய தலைவராக ரவிசாம் தேர்வு; 62 வது பொதுக்கூட்டத்தில் முடிவு!

கோவையில் இன்று நடைபெற்ற தென்னிந்திய மில்கள் சங்கத்தின் புதிய தலைவராக ரவிசாம் நிர்வாகிகளால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் செயல்பட்டு வரும் தென்னிந்திய மில்கள் சங்கத்தின் 62 வது பொதுக்கூட்டம் இன்று அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில நடைபெற்றது.

இந்தப்பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் தொழில்ரீதியான பல விஷயங்கள் கலந்தாலோசிக்கபட்டது. இதனையடுத்து தென்னிந்திய சங்கத்தின் புதிய தலைவராக, கோவை அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ரவிசாம் அனைத்து சங்க உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



மேலும் துணை துணை தலைவர்களாக கோவை சிவா டெக்ஸ்யார்ன் நிர்வாக இயக்குனர் சுந்தரராமன், ஈரோடு பல்லவா டெக்ஸ்டைல்ஸ் செயல் இயக்குனர் துரை பழனிசாமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவராக அஸ்வின் பதவிவகித்து வந்த நிலையில் தற்போது புதிய தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...