விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசு கையொழுத்திட்ட வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் எனவும் இல்லாடிவிடில் தமிழகத்தில் போராட்டம் தொடரும் என கோவையில் விவசாய சங்கத்தினர் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா, விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்கள், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, பொதுத்துறை சொத்துக்களைத் தனியாருக்கு விற்பனை உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களைக் கண்டித்து நாடுமுழுவதும் மாபெரும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்னதாக நடைபெற்றப் போராட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் கலந்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போரட்டத்தின் போது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் கூறுகையில், வேளாண் சட்டத்திற்கு எதிரானப்போராட்டத்தின் போது உயிரிழந்த 700 விவசாயிகளுக்கு மரியாதைச் செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்டு வெளியான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பபெற வேண்டும் எனவும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிராகவும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நடைபெறுகின்ற போராட்டம் மக்களுக்களுக்கான போராட்டம் என்று நினைத்து அனைவரும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் பேசிய சு. பழனிசாமி, இன்று பாரத் பந்த்தை அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்ததன் அடிப்படையில் ரயில் மறியல்கள், சாலை மறியல்கள், கடையடைப்பு போராட்டங்கள் நடைபெற்றுருவருகிறது. எனவே மக்களின் நலனைக்காப்பதற்குக் கோவை மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து இந்த போராட்டத்தை முன்னேடுப்போம் எனவும் விவசாயிகள் மீது போடப்பட்டிருந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டி சட்டம் நிறைவேற்றப் பட்டநிலையிலும், தொடர்ந்து விவசாயிகள் மீது வழக்குகளைக் காவல் துறை போட்டுவருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்குகளைத் திரும்ப பெறும் வரையிலும் நம்முடையே போராட்டம் தொடர வேண்டும் என தெரிவித்தார். குறிப்பாக பொதுமக்கள் இப்போராட்டத்தை நடத்தக் காரணமாக இருப்பது அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு எனவும் கார்ப்பரேட் நிறுவனக்களுக்கு ஆதரவாக செயல்படும் மோடி அரசு இத்தகையை சட்டங்களை உடண்டியாக திரும்ப பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.