மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பில் பொள்ளாச்சியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: மத்திய அரசி மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சியில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தலைமை தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தீடிரென போராட்டக்காரர்கள் மத்தியப்பேருந்து நிலையம் முன்னதாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போரட்டக்காரர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சியில் திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள். உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.