கொரோனா தடுப்பூசி முகாமில் திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜ் திடீர் ஆய்வு.!!

திருப்பூர் - விஜயாபுரம் அரசு பள்ளி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில், திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பார்வையிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் - விஜயாபுரம் அரசு பள்ளி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில், திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 3-ம் கட்ட சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 18-வயதிற்கு மேற்பட்டவர்கள் 20-லட்சத்து 77-ஆயிரத்து 9- பேர் உள்ளனர். இதுவரை 14-லட்சத்து 55-ஆயிரத்து 387-பேருக்கு முதல் தவணையும், 3-லட்சத்து 9-ஆயிரத்து 682-பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 6-லட்சத்து 21-ஆயிரத்து 708-பேருக்கு முதல் தவணையும், 58-ஆயிரத்து 536-பேருக்குப் பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. முதற்கட்டமாகக் கடந்த 12-ந் தேதி நடந்த முகாமில் 1-லட்சத்து 23-ஆயிரத்து 163- பேருக்கும், 2-ம் கட்டமாகக் கடந்த 19-ந்தேதி நடந்த முகாமில் 89-ஆயிரத்து 379-பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் 3-வது கட்ட சிறப்பு முகாமில் 80-ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புத் தடுப்பூசி முகாமில் 631-நிலையான முகாம்களிலும், 41- நடமாடும் முகாம்கள் என 672-மையங்களில் காலை 7-மணி முதல் இரவு 7- மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 2-ஆயிரத்து 688-பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று திருப்பூர் விஜயாபுரம் அரசு பள்ளியில் நடந்த முகாமினை எம்.எல்.ஏ செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளைப் பார்வையிட்டார். இந்த சிறப்பு முகாமானது மாலை ஏழு மணி வரை நடைபெறுகிறது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...