கிணத்துக்கடவில் ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இறகுப்பந்து போட்டி.!!

மூன்று நாட்களாக ஒற்றையர், இரட்டையர் போன்ற 17-பிரிவுகளில் இறகுப்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றவர் போட்டியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.


கோவை: கிணத்துக்கடவில் ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குக் கோப்பை வழங்கப்பட்டது.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொளவம்பாளையம் பகுதியில் உள்ள ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருபவர்களுக்கான இறகுப்பந்து போட்டி கடந்த 22-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 9-வயது சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்களை 70-பேர் பங்கேற்றனர்.



மூன்று நாட்களாக நடைப்பெற்ற போட்டியில் ஒற்றையர், இரட்டையர் போன்ற 17-பிரிவுகள் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நேற்று மாலை நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றவர் போட்டியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் LJJ ஜெகன், கிணத்துக்கடவு துணை வட்டாட்சியர் ராமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி இறகுப்பந்து பயிற்சியாளர் வெங்கடாஜலபதி செய்திருந்தார்.

Newsletter

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...