காட்டு யானைகள் தேயிலை தோட்ட குடியிருப்பை இடித்து சேதப்படுத்திய நிலையில், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்க எஸ்டேட் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாக 2-வது வார்டு கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.
வால்பாறை: வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளை 3-யானைகள் இடித்துச் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மூன்று காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளைசேதப்படுத்தியது. வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிக் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகள், நியாயவிலைக்கடைகள், மளிகைக் கடைகள், சத்துணவு மையங்கள் போன்றவற்றைச் சேதப்படுத்தி உள்ளிருக்கும் உணவுப் பொருட்களைத் தின்று சேதப்படுத்தி வருகிறது.
இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். வால்பாறை அருகே உபாசி எஸ்டேட் பகுதியில் இரவு சுமார் 8-மணி அளவில் மூன்று காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து அங்குள்ள முனிஷ், ஆமினா, செல்வி, மங்கை, ஆகிய 4-பேரின் வீடுகள் மற்றும் ஜன்னல் கதவு போன்றவற்றை உடைத்து உள்ளே இருந்த வீட்டுப் பொருட்களைச் சேதப்படுத்தியது.
இரவு நேரத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் யானைகளைத் தீப்பந்தங்கள் வைத்தும் வீட்டிலிருந்த பாத்திரங்களை வைத்துத் தட்டியும் அப்பகுதியிலிருந்து யானைகளை விரட்டினர். காட்டு யானைகளைக் குடியிருப்பில் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் யானைகளை விரட்டபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை அறிந்த சிங்கோனா 2-வது வார்டு கவுன்சிலர் சுதாகர் என்கிற குட்டி அப்பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட நபர்களைச் சந்தித்து விசாரித்து அப்பகுதியில் யானைகள்வராமல் இருக்க வனத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகவும், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்க எஸ்டேட் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.