கருணாநிதியை சந்திக்க மருத்துவமனைக்கு சென்ற வைகோவிற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து கோவையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை சந்திக்கச் சென்ற வைகோவிற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்து கோவையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனைக்கு சென்றார். ஆப்போது திமுக தொண்டர்கள் மருத்துவமனைக்குள் செல்ல வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை நோக்கி செருப்பு மற்றும் கற்களை வீசினர். 

கருணாநிதியைக் காண வைகோ மருத்துவமனைக்கு வருவதாக திமுகவின் நிர்வாகிகளுக்கு முன்னரே தகவல் தெரிவித்திருந்த நிலையுலும் அசம்பாவிதம் நடைபெற்றதால் மருத்துவமனைக்குள் செல்லாமலேயே வைகோ திரும்பிச் சென்றார். 

திமுக-வினரின் இந்த எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து மதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் மாவட்ட மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...