கோவை மாணவன் ரஞ்சித் சாதனை..! தமிழிலே யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி இந்தியக் குடிமைப் பணிக்குத் தேர்ச்சி..!

செவித்திறன் குறைபாட்டை தாண்டி, தமிழ் இலக்கியத்தை விருப்பப் படமாகத் தேர்வு செய்து, தமிழிலே தேர்வெழுதி இந்திய குடிமைப் பணிக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.



செவித்திறன் குறைபாட்டை தாண்டி, தமிழ் இலக்கியத்தை விருப்பப் படமாகத் தேர்வு செய்து, தமிழிலே தேர்வெழுதி இந்திய குடிமைப் பணிக்குத் தேர்ச்சி பெற்றிருக்கும் கோவை மாணவனுக்கு குவியும் பாராட்டுக்கள்.

கோவை: தமிழ் இலக்கியத்தை விருப்பப் படமாகத் தேர்வு செய்து, தமிழிலே தேர்வு எழுதி இந்தியக் குடிமைப் பணிக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார் கோவையைச் சேர்ந்த மாணவன் ரஞ்சித்.



கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் - அமிர்தவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு இரு மகன்கள். மூத்த மகன் சென்னையில் மருத்துவராக உள்ளார். இவர்களது இளைய மகன் ரஞ்சித்திற்கு, பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு இருந்ததால், அவரது படிப்பிற்காக ஈரோட்டில் இருந்து கோவைக்கு வந்துள்ளனர்.

காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் படித்த ரஞ்சித், 12 ம் வகுப்பில் கோபால்சாமி நாயுடு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார்.



பிளஸ் டூ தேர்வில் காது கேளாதோருக்கான பிரிவில் 1117 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை பெற்றுள்ளார்.

இதனையடுத்து, 2016 ஆம் ஆண்டு மெக்கானிக்கல். இஞ்சினியரிங் பட்டப்படிப்பை பி எஸ் ஜி பொறியியல் கல்லூரியில் முடித்த ரஞ்சித், தொடர்ந்து UPSC தேர்வு எழுதி, இந்திய அளவில் 750 இடத்தை ரஞ்சித் பெற்றுள்ளார்.

சிறுவயது முதலே ரஞ்சித்திற்குச் செவித்திறன் குறைபாடு காரணமாக, அவரது பெற்றோர்கள் அவருடன் சத்தமாக உரையாடுவது வழக்கம். அவரின் நிலை அறியாதவர்கள், அதனை வித்தியாசமாக பார்க்கும் முன்னரே, அவர்களிடம் குழந்தைக்கு காது கேட்காது என்பதை சொல்லி, ரஞ்சித்தை வளர்த்ததாக அவரது தாய் அமிர்தவல்லி நெகிழ்ச்சி பட தெரிவித்தார்.



மேலும், ரஞ்சிதிற்க்காக சிறப்பு பி எட் படித்து கோவையிலுள்ள தனியார் பள்ளியில் தான் பணிசெய்து கொண்டே, அதே பள்ளியில் தனது இளைய மகனை படிக்க வைத்ததாக தெரிவித்த அவர் தாயார், கொரோனா காரணமாக சென்னை தனியார் ஐ.ஏ.எஸ் அகடமியில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டதால், அதில் படிக்க ரஞ்சித் மிகவும் சிரமப்பட்ட நிலையில், பி.எஸ்.ஜி கல்லூரி தமிழ் ஆசிரியர் பாரதி மிகவும் உதவியதாக இருந்ததாக தெரிவித்தார்.

தமிழ் மொழி படிக்க மற்றும் தேர்வு எழுத தனக்கு எந்த தடையும் இருந்ததில்லை என்று தெரிவித்த ரஞ்சித், பி.எஸ்.ஜி கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்த போது "கேம்பஸ் இன்டர்வியூ"வில் செவிகுறைபாட்டை காரணம் காட்டி வேலைக்கு எடுக்காமல் நிறுவனங்கள் தன்னை நிராகரித்ததை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி தன்னை ஊக்கப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்த ரஞ்சித், அந்த உந்துதலே தற்போது UPSC தேர்வில் வெற்றி பெற உதவியதாக தெரிவித்தார்.

தங்களது குடும்பத்திலேயே, ரஞ்சித் ட் தான் முதல் யு.பி.எஸ்.சி தேர்வாகியுள்ளதால், குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அனைவரும் மிகுந்த பெருமை மற்றும் மகிழ்ச்சியில் உள்ளதாக அவர் தயார் அமிர்தவள்ளி தெரிவித்தார்.

தனது நண்பர்களுக்கும், அண்ணனுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்த ரஞ்சித், தமிழக முதல்வர் தன்னுடைய பெயரை குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் முதல்வருக்கு தன்னுடைய பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்றார் ரஞ்சித்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...