கோவை கிணத்துக்கடவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேர் மீது வழக்கு பதிவு - போலீசார் விசாரணை..!

சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் அதிகாலை நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி இன்று அதிகாலை மூன்று மணிக்கு மேல் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது பழைய பேருந்து நிலையம் முன்பு, அதிகாலை நேரத்தில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய நபரை பிடித்து விசாரணை செய்ததில் நாமக்கல் மாவட்டம் சேர்ந்த குழந்தைவேல் என்பதும், இதேபோல் புதிய பேருந்து நிலையம் முன்பு சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த நபரை பிடித்து விசாரித்ததில கிணத்துக்கடவு மதுரைவீரன் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...