நாட்டுப்புறக் கலைகளின் மூலம் கோவையில் ஊட்டச்சத்து உணவுகளின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி; ஆதி யோகி சிலை முன்னதாக நடைபெற்ற நிகழ்வில் பலர் பங்கேற்பு!

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு இன்று ஆதியோகி சிலை முன்னதாக நாட்டுப்புறக் கலைகளின் மூலம் கோவையில் ஊட்டச்சத்து உணவுகளின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவையில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை ஆதியோகி சிலை முன்பாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில், கர்ப்பிணி பெண்கள்‌, பாலூட்டும்‌ தாய்மார்கள்‌, வளர்‌ இளம்‌ பருவ பெண்கள்‌ மற்றும்‌ பச்சிளம்‌ குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து எது? என்ன மாதிரியான சத்தான உணவுகள் மற்றும் சிறு தானிய உணவுகளை நம்முடைய அன்றாட உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



அதிலும் மக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில், சிலம்பாட்டம், பழங்குடியினர் நடனம் போன்ற நாட்டுப்புறக் கலைகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, இதில் பங்கேற்ற அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும் இந்நிகழ்ச்சியில், இரத்த சோகையைத் தடுக்கும்‌ விதமாக, முருங்கை கீரை, பசலை கீரை, பேரீச்சம்‌ பழம்‌ போன்ற இரும்பு சத்துமிக்க உணவுகளை உணவில்‌ சேர்த்துக் கொள்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இதோடு உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்கள்‌ சரிவிகிதமாக எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் அறிவுறுத்தப்பட்டது. ‌அத்துடன்‌, குழந்தைப் பிறந்ததில்‌ இருந்து குறிப்பிட்ட நாள்கள் வரை குழந்தையின்‌ ஆரோக்கிய மேம்பாட்டிற்காகக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்‌ மற்றும் சுகாதார முறையில் இருப்பதற்கான வழிமுறைக‌ள் குறித்தும்‌ எடுத்துரைக்கப்பட்டது.



கோவை தொண்டாமுத்தூர்‌ குழந்தைகள்‌ வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி அவர்களின்‌ அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த விழிப்புணர்வில் நிகழ்ச்சியில்,சுற்றுவட்டார அங்கன்வாடிப் பணியாளர்கள்‌, வட்டார ஒருங்‌கிணைப்பாளர்கள்‌ மற்றும்‌ மேற்பார்வையாளர்கள்‌ உள்ளிட்டோர்‌ பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்‌.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...