திருப்பூரில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்.!!!

கடந்த 5-மாத காலமாகச் சம்பளம் வழங்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் நிலுவை சம்பளத் தொகையை வழங்கக் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஏராளமானோர் கௌரவ விரிவுரையாளர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரக்கூடிய சூழ்நிலையில் கொரோனா காலத்தில் இணைய வகுப்புகளிலும், தற்போது நேரடி வகுப்புகளிலும் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த 5-மாத காலமாகக் கவுரவ விரிவுரையாளர்களுக்குச் சம்பளம் வழங்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு விரிவுரையாளர்களுக்கான நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...