65,000 ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் பழைய கார் வாங்க முயன்ற நபரிடம் ராணுவ வீரர் என அறிமுகப்படுத்தி 65,000 மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை, பொள்ளாச்சி, கோமங்கலம் புதூரைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் (27). தனியார் நிறுவன ஊழியரான இவர் பழைய கார் வாங்க திட்டமிட்டு, இணையதள விளம்பரங்களை பார்த்தார். 1.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் இருப்பதை பார்த்தார்.
அதில் குறிப்பிடப்பட்ட மொபைல் போன் எண்ணில் அழைத்தபோது, தன்னை ராணுவ வீரர் என அறிமுகப்படுத்தி பேசியவர், தான் மதுக்கரையில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வருவதாகவும், விரைவில் பணி மாறுதலாகி செல்ல உள்ளதால் காரை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், முன்பணமாக, 65 ஆயிரம் ரூபாயை தன் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறும் கூறியதை நம்பிய சிவராமகிருஷ்ணன், அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கில் 65 ஆயிரம் ரூபாயை செலுத்தினார்.
அதன்பின், அவர் போனை எடுக்கவே இல்லை. மதுக்கரை ராணுவ முகாமிற்கு சென்று விசாரித்தபோது, அப்படி யாரும் அங்கு பணியாற்றவில்லை என்பது உறுதியானது.
இதனையடுத்து, சிவராமகிருஷ்ணன் புகாரின்படி, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.