விபத்தில் உயிரிழந்த நபர் குறித்து கோவை சென்ட்ரல் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..
கோவை: கோவை கணபதி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உடல் நசுங்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவையில் இன்று கணபதி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சக்கரத்தில் சிக்கி அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து கோவை சென்ட்ரல் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.