வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் வைரஸ் பாதிப்பு காரணமாக வியாபாரிகள் வர அனுமதி இல்லாததால் சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை: கேரளாவில் ஏற்பட்டுள்ள நிபா வைரஸ் தாக்கத்தால் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாட்டு சந்தை பொள்ளாச்சியில் அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.
கடந்த மூன்று வார காலமாக கொரோனா, மற்றும் ஜிகா வைரஸ் தொற்று காரணமாக சந்தை நடத்த கோவை மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. தற்போது கூடுதல் தளர்வுகளாக உள்ளூர் வியாபாரிகளை கொண்டு மாட்டு சந்தை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து, இன்று மாட்டு சந்தை இயங்கியது. ஆனால், வெளி மாநிலங்கள் மாவட்டங்களில் இருந்தும் வைரஸ் பாதிப்பு காரணமாக வியாபாரிகள் வர அனுமதி இல்லாததால் இன்று சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக வருத்தம் தெரிவித்த வியாபாரிகள், சந்தை நடத்த தங்களுக்கு கூடுதல் தளர்வுகள் விதித்து தங்களை காக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.