அவதூறு வழக்கு; முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்..!

பொதுக்கூட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஆஜரானார்.


திருப்பூர்: அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கடந்த 2016ம் ஆண்டு, சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

அதன் ஒரு பகுதியாக, 2016ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்த பொதுக்கூட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.



இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...