பாலித்தீன் கவர்களை ஒட்டும் இயந்திரத்தை ஊழியர்கள் பணி முடிந்து செல்லும் போது அனைத்து வைக்காமல் சென்றுவிட்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அன்னை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் கீழ்தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் என்.ஜி.ஆர் சாலையில் திருச்செந்தூரைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவருக்கு சொந்தமான அன்னை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இயங்கி வருகிறது.
இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மேல்தளத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு மேல் தளத்திற்குச் சென்று படுத்து தூங்கி விட்டனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை ஐந்து மாடிகள் கொண்ட அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரின் கீழ்த்தள பகுதியிலிருந்து திடீரென புகை வெளியே வந்தது. இதனை பார்த்த அங்கு தங்கி இருந்த ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 5க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டன.
இந்த விபத்திற்கு பாலித்தீன் கவர்களை ஒட்டும் இயந்திரத்தை ஊழியர்கள் நேற்றிரவு பணி முடிந்து செல்லும் போது அனைத்து வைக்காமல் சென்றுவிட்டதன் காரணமாக அதிக சூடு ஏறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த தீ விபத்தின் காரணமாக பல்லடம் நகரின் மையப்பகுதியான என்.ஜி.ஆர். சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.