அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் பலர் திமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் - கோவையில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன்.

கோவையில் உள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை குறித்து தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன் கலந்துரையாடல்.



கோவை: கோவை வந்துள்ள தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன் இன்று மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடினர்.

கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருவதால், மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் வேலைகள் பளு ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா? மற்றும் பணி சுமை குறித்து தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய குழுவின் தலைவர் வெங்கடேசன் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து, மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெறும் தூய்மை பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.

பின்னர், சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்கள், பாதுகாப்பு உபகரணங்களை அவர் வழங்கினார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியலித்த அவர்: தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் சார்பாக இரண்டு நாள் சுற்றுபயணமாக தமிழகம் வந்துள்ளேன். நேற்று நீலகிரியில் நடந்த ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து இன்று கோவையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.



கோவை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு, தூய்மை பணியாளர்கள் குறைகளை கேட்டறிந்தேன். அப்போது, பத்து வருடங்களுக்கு மேலாக மாநகராட்சியில் பணியாற்றிய நிலையில், வைப்புநிதி பிடிக்கபட்டதாகவும் அதன் நிலை என்ன என்பது தங்களுக்கு தெரியவில்லை என தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, மாநகராட்சி ஆணையரிடம் கேட்ட போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கபட்டுள்ளது. இவ்வாறு பாராட்டு சான்றிதழ் அளிப்பது, தமிழகத்தில் இதுவே முதல் முறை.

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மிக முக்கியமான ஒன்றாகும். கோவையில் உள்ள பணியாளர்களுக்கு முறையாக அவை வழங்கபட நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு எனதுபாராட்டுக்கள்.

தமிழகம் முழுவதும், தூய்மை பணியாளர்களுக்கு நிர்ணயிக்கபட்டதற்க்கு குறைவான ஊதியம் வழங்கபடுகிறது. அதிகப்படியான வேலை பளு, குறைந்த ஊதியம் என ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகள் எதிர் கொள்கின்றனர். எனவே, இந்தஒப்பந்த பணியாளர் முறையை ஒழித்து, நிரந்தர பணியாளர் நடைமுறையை தமிழக அரசு.நடைமுறைபடுத்த வேண்டும்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து ஒப்பந்த பணியாளர்கள் நிலையை, தமிழக அரசு ஆய்வு செய்தால் அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கபட்ட தூய்மை பணியாளர்கள், இப்போது நீக்கபட்டு உள்ளனர். இதனால் நதியா என்ற ஒரு தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதும் பலர் பாதிக்கபட்டு உள்ளனர் என புகார்கள் வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கட்சியை காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது சரியானது அல்ல.



இந்த கலந்துரையாடலில், மாவட்ட ஆட்சியாளர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, காவல் கண்கண்ணிப்பாளர் செல்வ நாகாரத்தினம் உள்ளிட்டோர் பலர் கல்நதுகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...