கோவையில் பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள், கொடிக் கம்பங்களை அகற்றிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை ஆர்எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்தும், பிரதமர் மோடி பிறந்தநாளன்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்றிய காவல்துறையை கண்டித்தும், பாரத ஜனதா கட்சியின் சார்பில் காந்திபார்க் சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை ஆர்எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்தும், பிரதமர் மோடி பிறந்தநாளன்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்றிய காவல்துறையை கண்டித்தும், பாரத ஜனதா கட்சியின் சார்பில் காந்திபார்க் சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தின் போது, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசிய ஆர்எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்தும், கடந்த 17 ஆம் தேதி கொண்டாடப்பட்ட பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்றிய காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்பி கார்வேந்தன், கண்டன உரையாற்றினார். தேசிய இளைஞர் அணி செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரமேஷ், முரளி, தாமு, துணைத்தலைவர்கள் மதன், மோகன் பொருளாளர் முருகேஷ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பிரேம்குமார், துணைத்தலைவர் சிவானந்தம் மற்றும் மண்டல தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...