தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் ஆர்வமும், தொழில் துறை அமைச்சரின் புரிதலும் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் துறையினர் அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக 'எம்எஸ்எம்இ' தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கோவை: தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் தொழில் நகரான கோவை மாவட்டத்துக்குத் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு உதவுவதில் தொழில் துறை அமைச்சர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து தொழில் துறையினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி அவர்களின் பிரச்சினைகள் கேட்டறிந்து உடனடியாக செய்யக்கூடிய உதவிகளைத் தாமதமின்றி தமிழக அரசு செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ரெசிடென்சி ஓட்டலில் இன்று தொழில் துறையினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதுகுறித்து 'கொடிசியா' தலைவர் ரமேஷ் பாபு, சீமா(SIEMA) தலைவர், கே.வி.கார்த்திக் மற்றும் 'லகு உத்யோக் பாரதி', தமிழ்நாடு, தலைவர், விஜயராகவன் உள்ளிட்டோர் கூறியதாவது:
கொரோனா நோய்த் தொற்று பரவலுக்குப் பின் அனைத்து தொழில் துறையினரும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இத்தகைய சவாலான சூழ்நிலையில் புதிதாகத் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில்துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுடன் இன்று நடந்த கலந்துரையாடல் கூட்டம் எம்எஸ்எம்இ தொழில் துறையினர் அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
'அமைச்சர் அவர் பேசவில்லை, அதற்குப் பதில் நீங்கள் பேசுங்கள்', உங்கள் பிரச்சனையைக் கேட்டு அது குறித்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வுகாண என்னால் முடிந்த அனைத்து உதவி செய்வேன் என்று கூறினார்.
நோய்த்தொற்று பரவலுக்குப் பின் எம்எஸ்எம்இ தொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினை நிதி மற்றும் நிதி சார்ந்த விஷயங்கள் என்பதை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்ப இன்று லோன் மேளா நடத்த துவங்கியுள்ளனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு எங்களுடன் கலந்துரையாடிய போது ஒரு விஷயத்தைக் கூறினார். அது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அது என்னவென்றால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய முதலீடுகள் மீது காட்டும் அதே அக்கறை ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்து அவை அனைத்தையும் தொடர்ந்து லாபகரமாகச் செயல்படுவதை உறுதி செய்ய அதிக அக்கறை காட்டி வருகிறார்.
கோவை மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் அனைத்தையும் தொடர்ந்து கேட்டறிந்து அனைத்துக்கும் தேவையான தீர்வுகளை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்று அமைச்சர் கூறினார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் ஆர்வமும், தொழில் துறை அமைச்சரின் இந்த புரிதலும் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் துறையினர் அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வோம்."
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.