கோவையில் இளைஞர்களைக் குறிவைத்து போதை மருந்துகளை விற்பனைச் செய்த இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் அவர்களிடமிருந்து போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளையும் பறிமுதல் செய்தனர்.
இதனால் பல இளைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இதுத்தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில், கோவை மாநகர் முழுவதும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் தேடிவரும் நிலையில் இதுத்தொடர்பாக சிலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்..
இந்நிலையில் தான் உக்கடம் பகுதியில் இன்று வாலிபர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனைச் செய்வதாக பெரியகடைவீதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கே போதை மாத்திரைகளைப் அடிக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த 23 வயதான யாசர் ராவத், கரும்பு படையைச் சேர்ந்த 23 வயதான ரிஸ்வான் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதோடு இவர்களிடமிருந்து 10 போதை மாத்திரைகள் ஊசி ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தததோடு இந்த 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.