பொதுமக்களை தரைக்குறைவாகப் பேசும் ரேசன் கடை ஊழியரை இடமாற்றம் செய்ய வேண்டும்; கோவை ஆட்சியரிடம் மனு அளித்த தேமுதிக இளைஞரணி பிரமுகர்!

கோவை செட்டி வீதியில் உள்ள ரேசன் கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், அங்கு பொருள்களை வாங்கச்செல்லும் பொதுமக்களை தரைக்குறைவாக பேசுவதால் அந்த ஊழியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேமுதிக இளைஞரணி பிரமுகர் வழக்கறிஞருடன் வந்து மனு அளித்தார்.


கோவை: கோயம்புத்தூர் செட்டிவீதியில் மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் நியாயவிலை கடை செயல்பட்டுவருகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரேசன் கடை இயங்கி வருவதால் ஒவ்வொரு நாளும் மாறி மாறி பல பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் எப்போது அந்த கடைக்கு சென்றாலும், பொருள்கள் இல்லை என மக்கள் அலைக்கழிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மக்கள் பொருள்கள் வாங்க வரும் போதெல்லாம், அங்கு பணிபுரியும் பெண் ஊழியரான கலைவாணி என்பவர், மக்களை ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசுவதாகக் கூறப்படுகிறது. எனவே ரேசன் கடைக்கு வரும் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கும் ரேசன் கடை பெண் ஊழியரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி இன்று குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதோடு ரேசன் கடை ஊழியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுடன் கையெழுத்து வாங்கி அதனையும் ஆட்சியரிடம் தே.மு.திக. மாணவரணி பிரமுகர் வழக்கறிஞருடன் வந்து ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. எனவே அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக ரேசன் கடைக்கு வரும் மக்களை ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசுவதைத் தடுக்க வேண்டும் எனவும், உடனடியாக எங்களின் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...