எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற மாதாந்திரக்குற்ற விவாதிப்பு கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு.
கோவை: எஸ்.பி.செல்வ நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற மாதாந்திரக்குற்ற விவாதிப்பு கூட்டத்தில், ஆகஸ்ட் மாசம் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்குக் கேடயம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் இன்று (20.09.2021) நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்குச் சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறப்பாக பணிபுரிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் கண்ணன், கோவில்பாளையம் உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், நிலைய பதிவேடுகளைச் சிறப்பான முறையில் பராமரித்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எழுத்தர் கோவிந்தராஜ், சிறந்த முறையில் CCTNSல் கோப்புகளைப் பதிவேற்றம் செய்த சூலூர் காவல் நிலைய காவலர் சுரேஷ், சிறப்பான முறையில் வழக்கினை கோப்பிற்கு எடுத்துத் திறம்படச் செயல்பட்ட பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய தலைமைக் காவலர் நாட்டுத்துரை ஆகியோர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும் சிறந்த காவல் நிலையமாகப் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையம் தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையை தாலுகா காவல் ஆய்வாளரிடம் மற்றும் சிறந்த உட்கோட்டமாகப் பொள்ளாச்சி உட்கோட்டத்தைத் தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையினை உட்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழ்மணி அவர்களுக்கும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வழங்கி கௌரவப்படுத்தினார்.

ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சிறந்த செயல்பாடுகள் குறித்து பரிசீலனை செய்து சுழற்கோப்பை வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இப்புதிய அணுகுமுறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற பாராட்டுக்கள் காவல்துறையினர் திறம்படச் செயல்படுவதற்கு ஊக்குவிப்பாக அமைகிறது.