திருப்பூரில் இன்று முதல் தொடர்ந்து 5 நாள்களுக்கு நடைபெறவிருக்கும் தூய்மைப்பணி முகாமை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைத்தார். இதோடு மாநகராட்சியை விரைவில் சுத்தம் செய்து சீர்மிகு நகரமாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: தமிழக முதல்வரின் உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப்பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் வருகின்ற செப்டம்பர் 25 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெறவிருக்கும் தூய்மைப்பணிகள் முகாமை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவங்கிவைத்தார்.

இந்த விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் நடைபெறவிருக்கும் இந்த தூய்மைப்பணிகளில் 3030 தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட உள்ளதாகவும், இவர்கள் 60 வார்டுகளில் அனைத்து பகுதிகளிலும் பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார். மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்கள் சீரமைக்கப்படும் எனவும் அந்த நேரத்தில் அனைத்துப்பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். எனவே திருப்பூர் மாநகராட்சியை முழுமையாக சுத்தம் செய்வதற்கு இந்த தூய்மைப்பணியின் போது பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் திருப்பூரில் அதிகமாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த விழாவில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.