கோவை ரத்தினபுரியில் அனுமதிக்கு மாறாக கூடுதலாக அடுக்கு மாடி குடியிருப்புகளைக்கட்டிய 2 பேரின் கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தின் கீழ் இரத்தினபுரி விநாயகர் கோவில் வீதி உள்ளது.
இப்பகுதியைச்சேர்ந்த இருவர் அடுக்குமாடிக்குடியிருப்பு கட்டுவதற்காக மாநகராட்சியின் நகரமைப்பின் கீழ் அனுமதிபெற்றிருந்தனர். அதில் சந்திரசேகர் என்பவர், இரத்தனபுரி விநாயகர் கோவில் வீதியில், 2 மாடியோடு 2 குடியிருப்புகளுக்கு மட்டுமே அனுமதி வாங்கியுள்ளார். ஆனால் அதில் மாநகராட்சியின் அனுமதியை முறையாகப் பின்பற்றாமல், கூடுதலாக 4 மாடிக்கட்டிடம் மற்றும் 9 குடியிருப்புகளைக் கட்டியுள்ளார்.
இதேப்போன்று அதேப்பகுதியைச் சேர்ந்த, சுலோச்சனா என்பவர் 2 மாடி மற்றும் 4 குடியிருப்புகளுக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். ஆனால் அந்த அனுமதிக்கு மாறாக கூடுதலாக 4 மாடிக்கட்டிடம் மற்றும் 16 குடியிருப்புகளை அங்கே கட்டியுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, விதிமுறை மீறி கட்டியுள்ள அடுக்கு மாடிக்குடியிருப்புகளுக்கான அனுமதியை ரத்து செய்ததோடு, மாநகராட்சியின் கட்டிட அனுமதிக்கு மாறாக உள்ளதாக தெரிவித்து இவ்விரு கட்டிடங்களையும் பூட்டியதோடு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.