மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரிலுள்ள மாநில பொதுச்செயலாளர் வீட்டு முன்பு மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தியபடி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரிலுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மகேஷ்குமார் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுண்டம்பாளையம் சர்க்கிள் தலைவர் மகேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் பரமசிவம், கார்த்தி, மார்ட்டின், உதயகுமார், கபில்,விஷ்ணு, தேவராஜ், ரங்கசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.