கோவையில் TFSC சார்பில் ஆசாத் நகர் பகுதியில் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மைதானம் திறப்பு விழா..!

கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதர் IPS., அவர்கள் மைதானத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.


கோவை: கோவையில் TFSC சார்பாக ஆசாத் நகர் பகுதியில் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மைதானம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வின் விளையாட்டுப் பிரிவான Track Force Sports Club (TFSC) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி அளித்து அவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான அணிகளில் பங்கெடுக்கச் செய்துள்ளது.

அதன் அடுத்த நிகழ்வாக, விளையாட்டுப் பயிற்சி மைதானம் கோவை கரும்புக்கடை, ஆசாத் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

TFSC சார்பாக ஆசாத் நகர் பகுதியில் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மைதானம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.



இந்நிகழ்வில், கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதர் IPS., அவர்கள் மைதானத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.



இந்நிகழ்வை SIO கோவை மாவட்டத் தலைவர் சகோ.முகமது ஆசிக் (Ph.d.,) அவர்கள் தலைமை தாங்கினார்.



மேலும், இந்நிகழ்வில் திமுக கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (Ex.MLA) அவர்களும், ரத்தினம் குழுமத்தின் தலைவர் Dr.மதன் (எ) செந்தில் அவர்களும், சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்ஸ் அலி அவர்களும், இந்தியா மாணவர் இஸ்லாமிய அமைப்பு தமிழ் நாடு தலைவர் (SIO) சபீர் அஹ்மத் அவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர் தலைவர் உமர் பாருக், அவர்களும், ஜமாத் செயலாளர் M. அப்துல் ஹக்கீம் அவர்களும், SA vegetable உரிமையாளர் SA பஷீர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



மேலும், TFSC தமிழக பொறுப்பாளர் சகோ. சுல்தான் அவர்கள் நன்றியுரை கூறினார்.



நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசுகளும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...