உடலில் முழுதும் தீக்காயத்துடன் வீதியில் ஓடிய இளைஞரின் சிசிடிவி காட்சிகள்; கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட சண்டையால் நேர்ந்த விபரீதமா? போலீசார் தீவிர விசாரணை!

திருப்பூரில் பல்லடம் பெரியார் நகரைச்சேர்ந்த இளைஞர் உடல் முழுவதும் தீக்காயத்துடன் வீதியில் ஓடிய காட்சிகள் சிசிடிவில் பதிவாகி அனைவரையும் அதிர்ச்சியி்ல ஆழ்த்தியுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட சண்டைதான் காரணம் என தெரியவருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரைச்சேர்ந்தவர் 38 வயதான மாணிக்கம். அப்பகுதியில் கட்டிடத்தொழில் மேற்கொண்டு வரும் தன்னுடைய மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக துர்க்கை அம்மாள் என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்த இவர் கணவன் மனைவி போன்றே தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்ததாகக்கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சந்தேஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், அருகில் உள்ள வீட்டார்கள் இவர்களை சமானதானப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தான் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி காலை மாணிக்கம் மற்றும் இவரது கள்ளக்காதலி துர்க்கை அம்மாள் என்பவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், வீட்டில் இருந்து தீடிரென உடல் முழுவதும் தீக்காயத்துடன் மாணிக்கம் வீதிக்கு வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என கதறிய நிலையில், அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் இருந்த மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் உடலின் மீது கள்ளக்காதலி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்களிலிருந்து கூறப்படுகிறது.

இதுக்குறித்து விசாரணை நடைபெற்று வந்தநிலையில் தான், ஏற்கனவே 90 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.



ஆனால் தற்போது இவர் உடல் முழுவதும் தீக்காயத்துடன் தெருவில் ஓடிய சிசிடிவி காட்சிகள் வைரலாகிவருகிறது. எனவே இச்சம்பவம் எப்படி நடைபெற்றது? யார் காரணம்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...