திருப்பூரில் போலியான வீட்டுமனை விற்கப்பட்டதா? பத்திரப்பதிவு செய்த மறுப்பது ஏன்? பாதிக்கப்பட்ட மக்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்!

திருப்பூரில் வீட்டுமனையைப்பெற்று பல மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பத்திரப்பதிவு செய்ய மறுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவருகிறார் மணிமாறன்.

இவர் அங்குள்ள மக்களுக்குத் தவணை முறை அடிப்படையில், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைப்பெற்றுக்கொண்டு, பெருமாநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இடங்களை விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், நம்பிக்கையுடன் மக்கள் பலர் வீட்டுமனைகளை வாங்கியுள்ளனர். இதனையடுத்து பத்திரப்பதிவு செய்ய வருமாறு ரியல் எஸ்டேட் மணிமாறனை பல முறை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரச்சொன்னாலும் அவர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டினை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைக்கின்றனர். மேலும் ஏன் பணம்கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பட்டாவிற்கு பத்திரப்பதிவு செய்ய மறுக்கிறீர்கள்? என கேட்டும் இதுவரை எந்த வித பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே இதுக்குறித்து உரிய நடவடிக்கை எடுத்துத்தரக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரசம் செய்த பின்னர், இப்பிரச்சனைக்குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...