வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி, சுமார் ஐந்தரை ஏக்கர் விவசாய நிலத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அம்மாபட்டி அடுத்த கோணக்காட்டுத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் அதே பகுதியில் சுமார் ஐந்தரை ஏக்கர் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாகத் தேங்காய், பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இதனிடையே தனது தொழிலை விரிவுபடுத்த கனரா வங்கியில் கோவிந்தசாமி கடன் பெற்று உள்ளார்.
தொழில் நலிவடைந்த நிலையில், வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. இதற்கிடையே கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருரங்காடியை சேர்ந்த ஜானப் அலவி முகமது என்பவர் கோவிந்தசாமிக்குக் கடன் பெற்றுத்தருவதாகக் கூறியுள்ளார்.
கோவிந்தசாமி அவருடன் பல ஆண்டுகள் தொழில் செய்து வருவதால் அவரை நம்பி வங்கியில் கடன் பெறச் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனிடையே கோவிந்தசாமியின் சிபில் ஸ்கோர் மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் அவரால் வங்கியில் கடன் பெற முடியவில்லை.
இதையடுத்து, கோவிந்தசாமியின் ஐந்தரை ஏக்கர் நிலத்தைத் தனது பெயருக்கு மாற்றினால் வங்கியில் கடன் பெற முடியும் என முகமது கூறியதை அடுத்து அவரது பெயருக்கு நம்பிக்கை அடிப்படையில் நிலத்தைக் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
ஆனால் முகமது வங்கியில் கடனை பெற்றுத் தராமல் ஐஸ்வர்யா பைனான்ஸ் செந்தில்குமார் மற்றும் சங்கர் ஆகியோருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு நிலத்தை விற்று உள்ளார். இதற்கு கோவிந்தசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அடியாட்களை வைத்து அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கோவிந்தசாமி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காகத் தனது மனைவியுடன் வந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் யாரும் எதிர்பார்க்காத வேளையில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதையடுத்து, அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறை கோவிந்தசாமி உடலில் தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.