ஒற்றைக் காலை தூக்கியபடி 10-கிலோ எடையை சுமந்து 30-வினாடியில் 42-தண்டால் எடுத்து கோவை இளைஞர் சாதனை.!!

உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும், 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகாரம் அளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சாதனையாளர் ரதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: ஒற்றைக் காலை தூக்கியபடி 10-கிலோ எடையை சுமந்தபடி 30-வினாடியில் 42-தண்டால் எடுத்து கோவை இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

கோவை நேரு நகரை சேர்ந்தவர் ரதீஷ் குமார். பட்ட மேற்படிப்பு முடித்துள்ள இவர் பிட்னஸ் கோச்சாக பணியாற்றி வருகிறார்.



ஒற்றைக் காலை தூக்கியபடி 10 கிலோ எடையை சுமந்து 30 வினாடியில் 42 தண்டால் எடுத்து சாதனை படைத்துள்ளார்.



இவரது முயற்சியை 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

சாதனையாளர் ரதீஷ் குமார் கூறுகையில்," ஒற்றைக் காலைத் தூக்கியபடி தண்டால் எடுப்பது எளிதல்ல. அதுவும் 10-கிலோ எடையை சுமந்து 30-வினாடியில் 42-தண்டால் எடுத்து நான் சாதனை படைத்துள்ளேன். கின்னஸ் ரெக்கார்டு 30-வினாடியில் 39-தண்டால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.



உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நான் இந்த முயற்சியை மேற்கொண்டேன். அதற்கு 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகாரம் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...