புள்ளுக்காடு பகுதியில் புதிதாக அமையவுள்ள மீன் மார்க்கெட்டில், மீன் விற்பனை செய்வதற்கு இடம் அளிக்க வேண்டும் என கோவை வட்ட மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்னர்.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மீனவர் சங்கத்தினருக்கு கடந்த 2019 முதல் 2023 வரை குளங்களில் மீன் பிடிப்பதற்கு அனுதி அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு பிடிக்கப்படும் மீன்களை உக்கடம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் விற்பனை செய்து கவருகின்றனர். ஆனால் கடைகள் எதுவும் இல்லாதக் காரணத்தினால் தரையில் அமர்ந்து பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதாக கோவை வட்ட மீனவர் சங்கத்தினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் கோவை புள்ளுகாடு பகுதியில் புதிதாக மீன் மார்க்கெட் ஒன்று அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. எனவே இந்த புதிய மீன் மார்க்கெட் எங்களுக்கு மீன்கள் விற்பனை செய்வதற்கு இடம் அளிக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதோடு எங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உக்கடம் மீன் மார்க்கெட்டில் என்ன பிரச்சனை? எனக்கேட்ட போது, மாநகராட்சி விதிகளின் படி தரையில் அமர்ந்து மீன் விற்பனை செய்வதற்கான அனுமதி இல்லை என மீன் மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இங்கு 72 கடைகள் உள்ள நிலையில் 68 கடைகள் முழுமையாக செயல்படுவதாகத் தெரிவித்தார். மேலும் மீனவர் சங்கத்துடன் பல ஆண்டுகளாக உள்ள நட்பின் அடிப்படையில் மீன் மார்க்கெட் வளாகத்தில் அவர்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இதோடு உக்கடம் பகுதி புறவழிச் சாலையில் அமைந்துள்ள மீன்மார்க்கெட் மேம்பாலப் பணிகள் காரணமாக இடிக்கப்பட உள்ளதாகவும் அதனைக் காலி செய்து தருமாறு கோவை மாநகராட்சி அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் உள்ளிடோருடன் பேச்சுவார்த்தை நடத்துள்ளது. இதுக்குறித்து தற்போது நலவாரியம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் உக்கடம் மீன் மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும். புதியதாக புள்ளுகாடு பகுதியில் அமைய உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் போதிய இடவசதி இல்லை எனவும் குளங்களில் மீன் பிடிக்கும் வியாபாரிகள் கூறும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.