வால்பாறையில் தேசிய சுகாதார பணி திட்ட பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

கடந்த மூன்று ஆண்டு காலமாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றிய தங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: வால்பாறையில் தேசிய சுகாதார பணி திட்ட பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வால்பாறை முடீஸ் மற்றும் சோலையாறு நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மத்திய அரசின் ஆஷா சட்டத்தின்படி, தொற்று நோய்களுக்கான தடுப்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை திட்டத்தின் படி வால்பாறையில் 45 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் 2,600 பேர் இத்திட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கடந்த மூன்று வருடங்களாக வால்பாறை பகுதியில் உள்ள சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் மற்றும் தொற்றா நோய்கள் பற்றி கண்டறிந்து மருந்து மாத்திரைகள் விநியோகம் செய்து பதிவேடுகளை பராமரித்து வந்தனர்.

மேலும், இவர்கள் பரிசோதனை செய்து மாத்திரை வழங்கும் வீடுகளின் எண்ணிக்கைக்கு தகுந்தார்போல் ஒரு வீட்டிற்கு ரூபாய் 10 வீதம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த வகையில், கடந்த மாதம் தமிழக அரசு வீடுகளைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, வால்பாறை நகராட்சி மூலம் மாத ஊதியம் 4500 ரூபாய் என்ற அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, மத்திய அரசின் ஆஷா திட்டத்தின்படி பணியாற்றும் பணியாளர்களின் பணிகள் அவர்களுக்கு மாற்றி வழங்கப்பட்டுள்ளது.



மேலும், ஆஷா திட்டத்தின்படி பணியாற்றியவர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டு காலமாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றிய தங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், தங்களுக்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும் வரை வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...