வால்பாறையில் குடியிருப்புப்பகுதிகளுக்குள் நுழைந்த காட்டுயானைகள், நியாய கடையை சேதப்படுத்தியது. எனவே அதிகரிக்கும் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெரும்பாலான யானைகள் வழித்தடங்கள் அனைத்தும் குடியிருப்புப்பகுதிகளாக மாறிவிட்ட நிலையில், வனத்திற்குள் இருந்து இரைத்தேடி காட்டுயானைகள் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் யானைகள் உலா வருவது வாடிக்கையாக மாறிவிட்டது. நேற்று வால்பாறை அருகே உள்ள ஈடியார் எஸ்டேட் பகுதிக்குள் 3 காட்டுயானைகள் நுழைத்து வீடுகள் மற்றும் நியாயவிலைக்கடைகளை சேதப்படுத்தியது.

இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வால்பாறை அருகே முடிஷ் எஸ்டேட் பகுதியில் உள்ள ரெட்ரோஸ் நியாயவிலைக்கடையில் நுழைந்த 3 காட்டுயானைகள் அக்கட்டிடத்தை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்து அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை தின்று சேதப்படுத்தியது.

இதனைக்கண்ட மக்கள் அச்சத்தில் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. இனிமேலாவது காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.