கோவை காரமடை பகுதியில் பட்டா வழங்கியதில் மோசடி; பட்டாக்களை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 91 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யக்கோரி 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பட்டா வழங்கியதில் மோசடி நடைபெற்றதாகவும், அந்த பட்டாக்களை ரத்து செய்யக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இது தொடர்பாக அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன் நகரில் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 91 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளது. சிலரின் வீட்டுமனைப்பட்டாக்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.

இதுதொடர்பாக, ஏற்கனவே கன்னார்பாளையம், சாஸ்திரி நகர், கைகாட்டி புதூர், கருப்பராயர் நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து 10-வது வாரமாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.



ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவில்லை. தற்போது மீண்டும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...